Home முகப்பு About Heroes Day மாவீரர் நாள் Events நிகழ்வுகள் Poems கவிதை Deepam List தீபம் Articles கட்டுரை Audio ஒலிபதிவு Video ஒளிபதிவு Contact Us தொடர்பு
 ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும்!



 



மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரி



மானொத்த தமிழ் இனமே! உங்கள்



உயிரினும் மேலான தாய் நாட்டின்



உன்னத விடிவிற்காய் உமையீந் தீரே!



வயிறுதான் பற்றியெரி கின்றதே எங்கள்



வணங்கா மண்தன் நிலைதனை யறிந்து



துயிலின்றி நாளும் துன்பக் கடல்தனில்



துடித்துத் துவண்டு வாடுகின் றோமே!



 



காப்பு வேண்டியே காப்பரண் தாண்டிக்



கடுகிச் சென்றிடக் காவலர் வேண்டியும்



மூப்பிளமை நோக்கா தவர்பாதம் பற்றி



முடிவிலும் வாழ்வு உம்முடன் தானென்றே



கூப்பிய கைதனில் கொற்றவனை எண்ணி



குற்றுயிர் நிலையிலும் கண்ணியம் பேணி



சாப்பிடவும் கதியற்றுத் தண்ணீரு மின்றி;



சதியினிற்; சாவினைத் தழுவி நின்றீரே!



 



மீண்டும் பிறப்பீர் மிகவிரை வினிலே!



மெத்தவும் சுதந்திர மண்ணுமை ஏற்கும்



வேண்டும் நலங்கள் யாவும் பெற்றே



விளைநிலம் யாவும் விருட்சமாய் மாறும்.



தாண்டிச் சென்றித் தரணி யெங்கும்



தமிழீழக் கொடியாம் புலிக்கொடி பறக்கும்



ஆண்ட பரம்பரை மீளவும் ஆளும்



ஆன்றவெம் தலைவன் ஆட்சி தனிலே!



Select Type       
நான் வேண்டும் உலகம்
வே.சுதன் 2010-03-15 11:57:13
தேசத்தின் குரலே!
வே.சுதன் 2009-12-26 00:58:57
தமிழன்.
அபிசேகா. 2009-12-26 00:55:04
வன்னியில் ஓர் அதிர்வு.
அபிசேகா. 2009-12-26 00:53:09
ஒன்று சேரட்டும் - கரங்கள்.
அபிசேகா. 2009-12-26 00:50:50
தலைமகனை இழந்த தாயின் கதறல்....!
அபிசேகா. 2009-12-26 00:48:47
ஆம் தமிழீழம் தெரிகிறது...!
அபிசேகா. 2009-12-26 00:46:09
       
 
© 2009.All Rights Reserved.
Designed by World Tamil Media Group