Home முகப்பு About Heroes Day மாவீரர் நாள் Events நிகழ்வுகள் Poems கவிதை Deepam List தீபம் Articles கட்டுரை Audio ஒலிபதிவு Video ஒளிபதிவு Contact Us தொடர்பு
 தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே!

 

தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத்

தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே!

அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே!

ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை

அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே!

ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக்

கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே

காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே!

முள்ளி வாய்காற் களமுனை தனிலே

முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து

அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து

ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து

எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி

எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் 

துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து

துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்!

சாவென்பது உமக்கில்லை சான்று பலவுண்டு

சாற்று தற்கரிய வஞ்சனையிற் றாமங்கு

தாவிப் பறந்து இரந்து பொய்யுரைத்து 

தரணியிற் கிடைத்த வலிமைத் திறனால்

ஈவிரக் கமின்றி எய்தநச்சுப் பாணங்களால்

இன்னுயிர் ஈய்ந்தீரே இகமறியச் செய்தீரே!

தூவினோம் மலர்கள் தூய மேனிகளில்

சுடரென எழுந்து துடைத்திடுவீர் விழிநீர்;!

 
Country Email
A.Chandrasekaran(40)
India,
Wed, 1 Sep, 2010 02:03:53 -06:00 GMT
Deepam No: 1
Balaji.N(22)
India,
Thu, 5 Aug, 2010 00:18:18 -06:00 GMT
Deepam No: 2
Paramasivan Pillai(27)
Malaysia,
Sun, 1 Aug, 2010 20:48:20 -06:00 GMT
Deepam No: 3
kathir(23)
Sri Lanka,
Fri, 30 Jul, 2010 03:12:04 -06:00 GMT
Deepam No: 4
karan(25)
Iraq,
Fri, 30 Jul, 2010 01:38:22 -06:00 GMT
Deepam No: 5
solaimariappan(46)
India,
Thu, 22 Jul, 2010 13:55:00 -06:00 GMT
Deepam No: 6
THAMILARASAN(32)
United Kingdom,
Tue, 20 Jul, 2010 04:37:53 -06:00 GMT
Deepam No: 7
Thurai(30)
Canada,
Sun, 18 Jul, 2010 23:38:01 -06:00 GMT
Deepam No: 8
sendil(34)
Mauritius,
Mon, 31 May, 2010 09:41:33 -06:00 GMT
Deepam No: 9
   
 
© 2009.All Rights Reserved.
Designed by World Tamil Media Group